வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பைக் விபத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளதாக சத்துவாச்சாரி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. அந்தத் ததவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (வயது 30) மற்றும் பெருமாள் (வயது 32) என்பது தெரியவந்துள்ளது.
பெயிண்டிங் வேலை செய்துவரும் இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, வசூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியாகியுள்ளனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..