இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த தீபா (50) என்ற பெண் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சல் அவரை ஒரே இரவில் கோடீஸ்வரியாக மாற்றியதாகவும், அவர் தற்போது எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தீபாவும், அவரது கணவரும் Www.mahzooz.ae என்ற இணையத்தில் ஒரு வாட்டர் பாட்டில் வாங்குவதன் மூலம் ஆறு எண்கள் கொண்டு விளையாடப்படும் Mahzooz என்ற குலுக்கலில் பங்கேற்றுள்ளனர்.
அந்த குலுக்கலில் தீபாவுக்கு அதிர்ஷ்டவசமாக ஒரே நாளில் Dh1,000,000 (இலங்கை மதிப்பில் ரூபாய் 5,43,73,608 கோடி) பரிசு விழுந்துள்ளதாக தீபா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதேபோல் பாண்டிச்சேரியை சேர்ந்த இந்தியரான Baranidaran (40) என்பவருக்கும் Dh1,000,000 (இலங்கை மதிப்பில் ரூபாய் 5,43,73,608 கோடி) அதே குலுக்கலில் பரிசு விழுந்துள்ளது. மேலும் வருகின்ற 14-ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அடுத்த Mahzooz குலுக்கல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.