ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவது சந்தேகம்தான் என டேவிட் வார்னர் கூறியுள்ளார் .
இந்த ஆண்டு நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் பாதி ஆட்டத்தில் மட்டும் ஒரு வெற்றியை பெற்று தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. அதேசமயம் தொடர் தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியில் இருந்த சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அணியின் கேப்டனான டேவிட் வார்னரை அதிரடியாக நீக்கியது. இதனால் அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.அதேசமயம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டேவிட் வார்னர் ப்ளெயிங் லெவனில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார். இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது .இதன் பிறகு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 7 போட்டிகளில் 3 அரைசதம் உட்பட 286 ரன்கள் குவித்தார்.
அதோடு ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது .இந்நிலையில் தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகின்றார். இதனால் இவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்க பல அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன .இந்த நிலையில் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .இதற்குகமெண்ட் செய்த ரசிகர் ஒருவர்,” ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எப்படி செயல்படும் ? சிறப்பாக செயல்படுமா ? “என்று கேள்வி எழுப்பினார் .
இதற்கு பதிலளித்த வார்னர் அதை ரீடிவிட் செய்து “அது சந்தேகம்தான்” என கலாய்த்தார். இந்த ட்விட் வைரலான நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் டேவிட் வார்னரின் ட்விட்டை, ரீடிவீட் செய்து,”ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்றதற்கு வாழ்த்துக்கள் வார்னர். மீண்டும் பார்முக்கு திரும்பியது போல் தெரிகின்றது .ஐபிஎல்-லில் நல்ல முறையில் ஏலம் போவீர்கள் என நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளது. இவ்வாறு ட்விட்டரில் வார்னர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகமும் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Baha doubt it https://t.co/eQCvlvzYXG
— David Warner (@davidwarner31) December 28, 2021
Congrats on the Ashes win Davey – Looks like you are back to 🍾🍻 form and enjoying the after party! On the other hand we hope you have a good auction! 👍🏼😂 https://t.co/grZrRn5Zqm
— SunRisers Hyderabad (@SunRisers) December 28, 2021