Categories
சினிமா தமிழ் சினிமா

டுவிட்டரில் அமிதாப் பச்சன் வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய உருக்கமான பதிவு…!!!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் 4.5 கோடி ரசிகர்களை பெற்றுள்ளார். இதற்கு வாழ்த்து  தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர் ஜாஸ்மின் என்பவர் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ‌ . அதில் நடிகர் அமிதாப் தனது தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியபோது என்னை காண வந்த என் தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவர் காலில் விழுந்து ஆசி பெற்ற போது எடுத்த புகைப்படம் இது. இது வரை கூலி படம் பார்க்க வில்லை. இந்த வலியுடன் இனியும் அந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன்’ என பதிவிட்டுள்ளார்.

1982 ஆம் ஆண்டு கூலி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலத்த காயங்களுடன் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஆபரேஷன் செய்யப்பட்டது . அந்த ஆபரேஷனில் அமிதாப்புக்கு வேறு ஒருவரின் ரத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் ரத்தம் கொடுக்கப்பட்ட நபருக்கு இருந்த ஹெபடைடிஸ் பி என்ற கல்லீரல் நோய் அமிதாப்புக்கும் தொற்றிக் கொண்டது . இன்றும் இதற்கான சிகிச்சை பெற்று வருகிறார் அமிதாப். இந்த சோகமான நினைவலைகளை கொண்டுள்ள அமிதாப்புக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்ததோடு தங்கள் சோகத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |