இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனின் டிவிட்டர் பதிவு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஹார்த்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு 4 ஓவர் வீசி 16 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதனையடுத்து 37 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்து சூரியகுமார் யாதவ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் கோஹ்லி காயம் காரணமாக கடைசி கட்ட ஓவர்களில் வெளியேறியதால் துணை கேப்டன் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அதன்பிறகே ஷாகுல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளார். இதனால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் இவர்கள் மூன்று பேரின் பெயரையும் குறிப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹாஸ்டேக்கை பயன்படுத்தியுள்ளார். இதனை பார்த்ததும் கோஹ்லி தான் பெரியவர், ரோஹித் தான் பெரியவர் என்று அவரவர் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.