Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கிடம் சென்ற ட்விட்டர்…. ட்ரம்ப் மீதுள்ள தடைகளை நீக்கப்போகிறாரா?..

ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கணக்குகள் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவது பற்றி சூசகமான முறையில் கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிக்கும் விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் இறங்கினர்.

அதன் பிறகு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் கலவரத்தை துண்டுவதாக கூறிய ட்விட்டர் மற்றும் முகநூல் இணையதளங்கள் ட்ரம்பின் கணக்குகள் அனைத்தையும் முடக்கிவிட்டன.

ட்விட்டர் நிறுவனமானது ட்ரம்பிற்கு நிரந்தரமாக வாழ்நாள் தடையை அறிவித்தது. இதில் ஆத்திரமடைந்த டொனால்ட் டிரம்ப், சொந்தமாக “ட்ரூத் சோசியல்” என்னும் சமூக வலைதளத்தை துவக்கினார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தன் வசப்படுத்தியுள்ளார்.

தற்போது அவர், ட்ரம்பின் வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என்பது தொடர்பில் சூசகமாக கூறி இருக்கிறார். மீண்டும் டிரம்பிற்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது தொடர்பில் தீர்மானிக்கும் ஒரு கவுன்சிலை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் எலான் மஸ்க்கின் கைகளுக்கு சென்று விட்டதை ட்ரம்ப் அதிகமாக பாராட்டி இருக்கிறார்.

இது பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இப்போது தான் ட்விட்டர் புத்திசாலியிடம் உள்ளது. இதற்கு மேலும் தங்கள் நாட்டை வெறுக்கக்கூடிய இடதுசாரி மனநோயாளிகளிடம் இருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |