ட்விட்டர் நிறுவனம் நேற்று மட்டும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் அதிகமான பணியாளர்களை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனமானது, உலகில் அதிக பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகம் முழுக்க பணி புரியும் ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் அதிகம் பேரை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்.
அதாவது, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 7500 பேரில் பாதிக்கும் அதிகமான பணியாளர்களை நேற்று நீக்கம் செய்திருக்கிறார். இது பற்றி எலான் மஸ்க் தெரிவித்ததாவது, ட்விட்டர் நிறுவனத்தில் பணியாளர்கள் குறைப்பு குறித்து துரதிஷ்டவசமாக நிறுவனத்திற்கு ஒரு நாளில் 32 கோடி இழப்பு ஏற்படும் போது வேறு வழி கிடைக்கவில்லை. அனைத்து பணியாளர்களுக்கும் மூன்று மாதங்களுக்குரிய சம்பளம் அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.