Categories
உலக செய்திகள்

பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மஸ்க்…. என்ன காரணம்?….

அமெரிக்க நாட்டின் பிரபல ராப் இசை பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் பிரபலமான ராப் இசை பாடகரான கன்யே வெஸ்ட் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக எலான் மாஸ்க் தகவல் வெளியிட்டுள்ளார். கன்யே வெஸ்ட் பல தடவை கிராமிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் இவர் ஹிட்லர், நாசிவாதம் தொடர்பில் சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் தான் எலான் மஸ்க்குடன் பேசிய பதிவுகளையும் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் அவரின் பதிவுகள் வன்முறையை ஏற்படுத்தும் விதமாகவும், ட்விட்டர் விதிமுறைகளை மீறியும்  இருப்பதாக கூறி அவரின் கணக்கை முடக்கியுள்ளனர்.

Categories

Tech |