Categories
உலக செய்திகள்

Twitter: எலான் மஸ்க் எல்லா பங்கையும் வாங்க போறாரா?…. எவ்வளவு கோடி தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டரை 3.34 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதாக சென்ற சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். ஆனால் இதற்குரிய ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலக் கணக்குகள் இல்லை என்பதை நிரூபிக்காததால் அதை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியது.

இப்போது அதனை எலான் மஸ்க் உறுதிப்படுத்தி உள்ளார். எனவே டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்கிக்கொள்வதாக எலான் மஸ்க் கூறியிருப்பதாக ப்ளூம்பெர்க், ராய்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் செய்திகள் வாயிலாக அறியப்படுகிறது. அதனை தொடர்ந்து டுவிட்டரின் ஏராளமான பங்குகள் எலான் மஸ்கிடம் செல்ல இருக்கிறது. இம்முடிவு டுவிட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்கிற்கும் இடையேயான சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |