உலகின் பிரபல சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்த பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.1 % பங்குகளை வாங்கினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் எலான் மஸ்க் இடம் 4,400கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்துக்கு டுவிட்டர் நிறுவனமானது சம்மதம் தெரிவித்தது.
அதன்பின் நேற்று முன்தினம் இந்த ஒப்பந்தம் இறுதியானது. இந்நிலையில் எலான் மஸ்க் இப்போது டுவிட்டர் நிறுவனம் பொது நம்பிக்கையை பெறுவதற்காக அரசியல் ரீதியில் நடுநிலையாக இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், டுவிட்டர் பொதுநம்பிக்கைக்கு தகுதியானதாக இருப்பதற்கு, அது அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.