ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்தொடர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு நன்றி தெரிவித்த இளம் பெண்ணிற்கு அவர் அளித்த பதில் குறித்து இணையதள வாசிகள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் என்பவர் திகழ்கிறார். இவர் ட்விட்டர் பக்கத்தில் பல நபர்களுடன் உரையாடி வருகிறார். இவ்வாறான சூழ்நிலையில் எலான் மஸ்க் ரெபேக்கா என்னும் பெண்ணின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ரெபேக்கா என்னும் அந்த பெண் எலான் மஸ்கிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அதாவது எலான் மஸ்க் தன்னை பின்தொடர்வது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு பதிலளித்த எலான் “தன்னை மன்னிக்கவும், தவறுதலாக பின்தொடர்ந்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிலை கண்ட இணையத்தள வாசிகள் அனைவரும் இதுகுறித்து கிண்டல் செய்து வருகிறார்கள்.