மத்திய அரசை நோக்கி கவிஞர் வைரமுத்து அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்று வலுப்பெற்று வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கேள்வி ஒன்று எழுப்பி பதிவிட்டுள்ளார்.
அது
“எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.”