Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 20 நாள்….! புதுமாப்பிளைக்கு நேர்ந்த சோகம் ….!!

நடைப்பயிற்சியின் போது இடி தாக்கி புதுமாப்பிள்ளை மரணமடைந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரத்தில் அடுத்த கூரம் கிராமம் அரசமரத்தெருவில் வசித்து வருபவர் கார்த்தி. பாலுசெட்டிசத்திரம் பஜாரில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு நிதிநிறுவனம் நடத்தி வருகின்றார். காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலை கருமேகம் சூழ பலத்த இடியுடன் சேர்ந்து மழை பெய்தது.

இந்நிலையில் திருமணமாகி 20 நாட்களே ஆன கார்த்தி இன்று காலை 7 மணி அளவில் ஏரிக்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். திடீரென வானத்தில் கருமேகம் சூழ கார்த்தி மீது இடி தாக்கி உள்ளது. இதனை அடுத்து அந்த அவர் இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனை கண்ட கிராமத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் கார்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்தி இறந்த செய்தி கேட்டதும் புதுமணப்பெண் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |