டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிஷனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷனின் விலை ரூ. 44,332 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகள் விற்பனையை கொண்டாடும் வகையில் இந்த புதிய மேட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் கோரல் மேட் மற்றும் அக்வா மேட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடல் 3டி எம்ப்லெம், புதிய கிராஃபிக் மற்றும் டெக்ஸ்ச்சர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில் ஸ்கூட்டி பெப் பிளஸ் பல்வேறு மாறுதல்கள் மற்றும் அப்டேட்களை பெற்றுள்ளது.

மேலும், புதிய டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் பிளஸ் மடலில் 87.8சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 4.9 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 5.8 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. மேலும், இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ், மொபைல் சார்ஜிங் சாக்கெட், சைடு ஸ்டான்டு அலாரம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.