Categories
மாநில செய்திகள்

TV கட்டணம் உயர்வு….. அதுவும் இன்று முதல்….. முடியலடா சாமி…!!!!

இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவல் பொது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பொழுதுபோக்கு சாதனமாக இயங்கிவரும் தொலைக்காட்சியில் மக்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விரும்பிய சேனல்களுக்கு மாறும் முறை என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேபிள் கட்டணம் 30% முதல் 40% வரை உயரும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.  இதன்படி கேபிள் டிவி கட்டணம் ரூ 130 மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 154 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சோப்பு, பிஸ்கட் விலை உயர்ந்த நிலையில் தற்போது கேபிள் கட்டணம் உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |