குடியிருப்பை உணவகமாக மாற்றியதற்காக சோனு சூட் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சோனு சூட் மும்பை ஜுஹு பகுதியில் ஆறு மாடி கட்டிடம் ஒன்றை உணவாக மாற்றியுள்ளார். இதனால் சோனு மீதும், அவருடைய மனைவியும் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் அரசு விதிமுறைகளை மீறி அனுமதி இல்லாமல் உணவகத்தை உருவாக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மும்பை நகராட்சி சார்பில் அறிக்கை ஒன்று சோனுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 30 நாட்களுக்குள் பதில் அளிக்க சோனு மீறியதால் குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது குடியிருப்பு பகுதியில் முறைகேடாக உணவகமாக மாற்றியதற்காக மும்பை நகராட்சி சார்பில் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சோனு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.