உலக நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதற்காக இந்திய நாட்டில் விலையும் மஞ்சளை நாடுவதால் அதனுடைய விலை அதிகரித்துள்ளது .
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கையில் எடுத்து இருக்கக்கூடிய பொதுவான சில வழிகள் தங்கள் நாட்டு மக்களை ஊரடங்கின் மூலம் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வைப்பது,
அதே சமயம் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளச் செய்து அவர்களது எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது இந்த இரண்டின் மூலமாக கொரோனா வைரஸ் வருமுன் தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல நாடுகள் இந்திய நாட்டில் விலையும் மஞ்சளை நாடுகின்றனர்.
இதனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவிலிருந்து மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் விலை நான்கு சதவிகிதம் உயர்ந்து ரூ 60 முதல் 62 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இனி வரக்கூடிய காலங்களில் இதனுடைய விலை இன்னும் 10 சதவீதம் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.