Categories
உலக செய்திகள்

“கொரோனா போரில் உதவி”… அமெரிக்காவுக்கு துணை நிற்கும் துருக்கி!

கொரோனாவை தடுக்கும் போராட்டத்தில் அமெரிக்காவிற்கு உதவ துருக்கி துணை நிற்கும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்

சீனாவின் வூஹான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பல நாடுகளுக்கு பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. அவ்வகையில் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை சந்தித்தது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் அமெரிக்காவிற்கு முகக் கவசம் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப்க்கு எழுதிய கடிதத்தில் “கொரோனா தொற்றுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் அமெரிக்காவிற்கு துருக்கி துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.

கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் எடுத்த நடவடிக்கைகளை பாராட்ட விரும்புகிறேன்” என எழுதப்பட்டிருந்தது. துருக்கி அமெரிக்காவிற்கு 5 லட்சம் முக கவசங்களும், 2000 லிட்டர் கிருமிநாசினி மற்றும் 400 N95கவசத்தையும் வழங்கியுள்ளது. இதேபோன்று ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்கும் மருத்துவ உபகரணங்களை துருக்கி அனுப்பியுள்ளது.

Categories

Tech |