Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருக்கும் நாடுகள்.. துருக்கி அரசு வெளியிட்ட அறிக்கை..!!

துருக்கி அரசு, சுமார் 8 நாடுகளிலிருந்து வரும் மக்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

துருக்கி விமானத்துறை தனிமைப்படுத்துதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியா, இலங்கை, பிரேசில், நேபாளம், வங்கதேசம். ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் சுமார் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

முதலில் அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தும் சான்றிதழை  சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட இந்த நாடுகளை தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வரும் மக்கள் 14 தினங்களுக்கு முன்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டால்  நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.

அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது. மேலும் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்திருந்தாலும், அவர்களுக்கு அனுமதி உண்டு. தற்போது துருக்கியில் 52 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். எனவே துருக்கியில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |