துனிசியா நாட்டில் முதல் பெண் பிரதமராக ரவோதா போடன் ரோம்தானே என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக துனிசியாவில் அரசியல் குழப்பமும், பெரும் பொருளாதார நெருக்கடியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிபர் கைஸ் சயீத் கடந்த ஜூலை மாதம் முந்தைய அரசை கலைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பிறகு புதிய அரசை அமைக்க அதிபர் கைஸ் 4 மாதங்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ரவோதா போடன் ரோம்தானே (63) என்பவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் துனிசியாவில் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றுள்ள போடன் ரோம்தானே இதற்கு முன்னதாக உலக வங்கியில் வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள போடன் ராம்தானே பொருளாதார சிக்கலை தீர்த்து வைப்பதுதான் தனது முக்கியமான குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அதிபர் கைஸ்சும் துனிசியாவை பொருளாதார மற்றும் சமூக சிக்கலில் இருந்து மீட்பதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.