பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். அதன்பிறகு தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி நடிகர் ஜெயம் ரவி, தளபதி விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். கொழு கொழு என்று அமுல் பேபி போல் இருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தன்னுடைய எடையை குறைத்தார்.
அதன்பிறகு தற்போது படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு தற்போது மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும், திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் 2 மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமையான Moundota Fort and palace-ல் நடைபெறுகிறதாம். இந்த திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், மாப்பிளை யார் என்ற தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளார்கள்.