Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் துளசி மாடம் இருந்தால்… மகாலட்சுமி மட்டுமல்ல கிருஷ்ணரும் கூடவே இருப்பார்… ஆன்மீகம் கூறும் தகவல்..!!

ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன பாதிப்பும் இல்லை.

வீடுகளில் துளசிமாடம் அமைப்பதன் மூலம் பூச்சிகள் நுழையாமல் தடுக்கலாம். வீட்டில் துளசிமாடம் வைத்து வழிபடுவதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் அருளை மட்டுமல்ல பகவான் கிருஷ்ணரின் அருளையும் பெறலாம். பகவான் கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கசப்பான விஷயம் அனைத்தும் முறிந்து இனிப்பான வாழ்க்கை அமையும்.

பெண்கள் திருமணமாகிப் புகுந்த வீட்டிற்கு செல்லும்போது துளசியிடம் விடை பெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீருற்றி வழிபட வேண்டும். வறுமை அகல,திருமணப்பேறு உண்டாகத் துளசி வழிபாடு அவசியம். கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வணங்கித் தீப, தூப நிவேதனங்களுடன் துளசியை பூஜித்து வர வறுமை அகலும், திருமணப்பேறு உண்டாகும். சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். துளசியின் பெயர்களை அர்த்தம் அறிந்து படிப்பவனுக்கு அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

Categories

Tech |