Categories
தேசிய செய்திகள்

டியூஷன் படித்த 17 வயது மாணவனுடன்… மாயமான ஆசிரியை… கதறும் பெற்றோர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

வீட்டிற்கு டியூஷன் வந்த மாணவனுடன் டியூசன் டீச்சர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் என்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளான். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டின் அருகில் உள்ள ஆசிரியர் வீட்டிற்கு சென்று டியூஷன் படித்து வந்துள்ளார். மேலும் ஒரு நாளைக்கு அந்த மாணவனுக்கு 4 மணிநேரம் அவர்கள் டியூஷன் எடுப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் டியூஷனுக்கு சென்ற தனது மகன் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டியூஷன் நடத்தும் ஆசிரியரின் வீட்டிற்கு போன் செய்து கேட்டுள்ளனர். அப்போது அவரது பெற்றோர்கள் கணவனைப் பிரிந்து மகள் தனியாக வசித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வேறு எந்த தகவலையும் அவர்கள் கூறாமல் போனை வைத்து விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆசிரியர் மீது கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் இருவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ள காரணத்தினால், அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |