பஞ்சாபில் ட்யூஷன் போன 13 வயது சிறுவனை ஆசிரியையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோஷத்தை நீக்குவதற்காக அவர் இப்படி செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி,சிறுவனை பெற்றோரிடம் இருந்து அழைத்து வந்து உள்ளார்.
வீட்டிலேயே வைத்து திருமணம் செய்துகொண்ட ஆசிரியை, 6 நாட்கள் கழித்து கணவர் இறந்தது போல விதவை கோலம் தரித்திருக்கிறார். இதற்கு பின் வீட்டிற்கு வந்த சிறுவன் பெற்றோரிடம் எல்லாவற்றையும் கூற, ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.