Categories
அரசியல்

எல்லா கட்டுப்பாடும் சரி தான்….! டாஸ்மாக்கை மட்டும் ஏன் மூடல….? சரமாரியாக கேள்வி எழுப்பும் டிடிவி…..!!!

அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரன், தமிழகத்தில் கொரோனா காரணமாக பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக்கை அடைக்காததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தை குறைக்க பல புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், நாளையிலிருந்து நாடு முழுக்க இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இணையதள வகுப்புகள், மருத்துவம் தவிர கல்லூரிகள் அனைத்திற்கும் இம்மாதம் 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், பல புதிய விதிமுறைகளையும் அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், இவ்வாறு பல புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் முதலமைச்சர் டாஸ்மாக்கை மட்டும் ஏன் அடைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுபற்றி அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியிருக்கிறது. எனவே, பல புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய முதல்வர் திரு.ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை அடைக்காமல்  வைத்திருப்பது ஏன்? தொற்று பரவும் இடங்களாக இருக்கும் டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள் போன்றவற்றை அடைக்காமல் கொரோனாவை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முழுமையடையாது.

தேவைப்படும் பட்சத்தில், இது தொடர்பில் திரு.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் விடுத்திருக்கும் அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்துப்பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |