பாகிஸ்தான் நாட்டின் என்ற இயக்கம் நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்திருக்கிறது.
தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற இயக்கம், ஆப்கானிஸ்தான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த இயக்கம் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த தீவிரவாத அமைப்புடன் நடக்கும் சமாதான முயற்சிகள் பயன் தராது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டிடிபி இயக்கமானது பாகிஸ்தான் நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை மூலமாக வெற்றி கிடைப்பதற்கு குறைவான வாய்ப்புகள் தான் இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, டிடிபி இயக்கத்தின் நடவடிக்கைகள் அதிகமாக உள்ளது. அந்த அமைப்பு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாகிஸ்தான் நாட்டில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. டிடிபி இயக்கமானது, தங்கள் போராளிகளை ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான்கள் பிரிவுகளோடு சேர்ப்பதைக் காட்டிலும் ஒரு தனி இயக்கமாக தொடர்ந்து இயங்கவிருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.