இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுனாமி உருவாகும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இந்தோனேஷியா நாட்டில் இருக்கும் ஃபுளோரெஸ் தீவில் உண்டான மிகப்பெரிய நிலநடுக்கம், 7.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது. இது தொடர்பில் அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இன்று உருவான நிலநடுக்கம், கடலுக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
மேலும், மௌமரே என்ற மிகப்பெரிய தீவிலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததால், அங்கு அதிகமாக நிலநடுக்கம் உணரப்பட்டது. எனவே, அங்கு வசித்த மக்கள், பதறியடித்துக்கொண்டு வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். எனினும் இதனால் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.