Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து கொள்ளை…. ஆடம்பர வாழ்க்கைக்காக திருடினேன்…. தனியார் நிறுவன ஊழியர் வாக்குமூலம்..!!

பூட்டி கிடந்த செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கடைகள் மாலை 7 மணி வரை மட்டுமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இரவு வேளைகளில் பூட்டிக்கிடக்கும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதனை தடுப்பதற்காக இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் செல்போன் கடை ஒன்றிலும் இதேபோன்று ஒருவர் பூட்டி  கிடந்த செல்போன் கடையில் திருட முயற்சி செய்து காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார்.

பிடிப்பட்ட அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவர் ஒரகடம் பகுதியில் தங்கியிருந்து, அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், அவ்வப்போது ஆடம்பர செலவிற்காக திருட ஆரம்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி,

நேற்று முன்தினம் ஒரகடம் பகுதியில் இருந்த செல்போன் கடை ஒன்றில் பூட்டை உடைத்து கடையின் உள்ளே சென்ற அவரை ,  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஓரகடம் காவல்துறையினர் பார்த்து மடக்கிப் பிடித்து  கைதுசெய்துள்ளனர். விசாரணை  அனைத்தும் முடிவு பெற, தற்போது ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின் நீதிபதியின்  உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |