Categories
தேசிய செய்திகள்

முத்தலாக் கூறிவிட்டு, பணம் கொடுத்து குழந்தையை அபகரிக்க முயற்சி!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தானா என்ற பெண், தனது கணவர் தன்னை துன்புறுத்திவிட்டு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க முயற்சிப்பதாகவும் பாகத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுல்தானா என்ற பெண், தனது கணவர் தஸ்தகீர் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, தனக்கு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க முயற்சிப்பதாகவும் நிஷா பாகத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணான சுல்தானாவின், கணவரான தஸ்தகீருக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. அவர், தனது முதல் மனைவியுடன் நீண்டகாலமாக வாழ்ந்து வந்துள்ளார்.

முதல் மனைவியுடன் அவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, சுல்தானாவிற்கு அவர் மும்முறை தலாக் கூறியுள்ளார். மேலும், அவர் சுல்தானாவிற்கு பணம் தருவதாகவும், பணத்தை வாங்கிவிட்டு குழந்தையை விட்டுச் சென்று விடு எனக் கூறியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து சுல்தானா தெரிவிக்கையில், “எனக்கும் எனது கணவருக்கும் திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகளாகிறது. எனக்கு ஆண் குழந்தை பிறந்ததும், அவரும் அவரது முதல் மனைவியின் குடும்பத்தாரும்; என்னை உடல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினர். அவர்களுக்கு எனது குழந்தை தேவைப்படுகிறது. அதனால்தான், எனது கணவர் இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார். மேலும், பணத்தை வாங்கிவிட்டு குழந்தையை என்னிடம் இருந்து அபகரிக்க முயற்சிக்கிறார்” என தெரிவித்தார்.

Categories

Tech |