Categories
தேசிய செய்திகள்

முந்திச் செல்ல முயற்சி… கட்டுப்பாட்டை இழந்து லாரிக்கு அடியில்… தீயில் கருகி இருவர் பலி..!!

ஆந்திராவில் லாரியின் இடையில் சிக்கிய பைக் தீப்பிடித்து எரிந்ததால் இருவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம் நாகூரை சேர்ந்த 40 வயதான நாராயணரெட்டி போகலகட்டா கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ரோஷிரெட்டியுடன் பச்சுபள்ளி பாட்டா பகுதியில் கோவில் திருவிழாவிற்கு விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை நாராயணரெட்டி முந்திச் செல்ல அதிக வேகமாக சென்றுள்ளார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் முன்னால் சென்றால் கற்களில் மோதி லாரிக்கு அடியில் சிக்கியது. இதில் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பற்றியது. மளமளவென பிடித்த தீயால் லாரியில் இருந்தவர்கள் கீழே இறங்கி உயிர் தப்பினர். இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

Categories

Tech |