கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திற்குள் கண்டுபிடிக்க பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் களமிறங்கியுள்ளது
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டனில் நோய் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து அங்கிருக்கும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் புதிதாய் முயற்சி ஒன்றில் களமிறங்கியுள்ளது. தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருட காலம் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இந்த ஆய்விற்காக சுமார் 10 லட்சம் முறைகளை கண்டறிந்து 18 முதல் 55 வயது வரை கொண்ட மக்களைக் கொண்டு பரிசோதனை செய்ய ஆலோசனை செய்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு லட்சக்கணக்கான ChAdOx1 என்ற மருந்து தயாராகியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் லண்டன் நகரை கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.