Categories
உலக செய்திகள்

வேற வேலை நிறையா இருக்கு…. அமைதியாக போய்டுவேன்….. ட்ரம்ப் பரபரப்பு பேட்டி …!!

ஜனநாயக தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் வர இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் சார்பாக மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகின்றார். இதன் காரணமாக ஒருவருக்கொருவர் வாதம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ட்ரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன் “வரும் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றால் அதனை அவரால் ஏற்க முடியாது. தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டார். எனவே தேர்தலில் முறைகேடு செய்வதற்கு முயற்சிப்பார்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்பிடம் இது குறித்து கேட்க பதில் அளித்தவர், “வரும் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமைதியாக வெளியேறுவேன். எனக்கு இருக்கும் வேறு வேலைகளை சென்று பார்க்க தொடங்குவேன். நான் செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கின்றன” எனக் கூறினார். அதேநேரம் நான் தோல்வியுற்றால் அது அமெரிக்காவிற்கு கேடு தரக்கூடிய விஷயமாகவே அமையும் எனக் கூறினார். மேலும் வரும் தேர்தலில் ஈமெயில் மூலமாக வரும் வாக்குகளை பெறுவதற்கு ஜனநாயக கட்சியினர் மோசடி செய்வார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |