காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்ற்றுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இந்நிலையில் பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் டிரம்ப்_பும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்றும் ,
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்_பும் , காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் நிலை குறித்து கவலை இல்லை; காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாக். இடையேயானது என்று பிரதமர் மோடி_யும் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பில் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.காஷ்மீரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என கூறிவந்த ட்ரம் தற்போது இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ளும் என கூறியுள்ளதால் பாகிஸ்தான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.