Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கிய ட்ரம்ப் ….. வைரலாகும் போட்டோ ….!!

அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணத்தை முடித்து கிளம்பும் போது பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் வழங்கிய போட்டோ வைரலாகி வருகின்றது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன்  இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவாங்கா , மருமகன் ஜாரெட் ஆகியோரும் வந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

2 நாட்கள் இந்தியாவில் இருந்த ட்ரம்ப் சமர்பதி ஆசிரமம் , நமஸ்தே ட்ரம்ப் , தாஜ்மஹால் , அணிவகுப்பு மரியாதை , காந்தி சமாதி , பெங்களூர் கவுஸ் மோடியுடன் சந்திப்பு , கூட்டாக செய்தியாளர் சந்திப்பு  , அமெரிக்கா தூதரகத்தில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை , செய்தியாளர்கள் சந்திப்பு , ராஷ்ட்ரிய பவனில் இரவு விருந்து என பல்வேறு நிகழ்வுகளில பங்கேற்றார்.

நேற்று குடியரசு தலைவர் மாளிகை ராஷ்ட்ரிய பவனில் இரவு உணவு முடிந்து அமெரிக்கா கிளம்பும் போது பிரதமர் மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த்_தை ஆர்சிவாதம் செய்து விடைபெற்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 36 மணி நேரம் இந்தியாவில் இருந்த ட்ரம்ப் நேற்று இரவு நாடு திரும்பினார்.

Categories

Tech |