சீனாவில் கொரோனா தொடர்பாக என்ன நடந்தது என்பது பற்றிய வலுவான அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்
அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் இருக்கும் லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பான பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசிய பொழுது, “கொரோனா தொடர்பாக சீனாவின் வூஹான் நகரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் வலுவான அறிக்கையாக வெளியிடுவோம். அது இறுதியான முடிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொரோனா உலக அளவில் பரவும் தொற்றாக மாறுவதற்கு முன்னர் சீனா அதன் ஆபத்து குறித்து உலக நாடுகளை தவறாக வழிநடத்தி இருப்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அவர்கள் தனிப்பட்ட முறையில் பெரிய தவறு செய்ததாகவே நான் கருதுகிறேன். அதோடு செய்த தவறை மறைக்கவும் அவர்கள் முயன்றனர்” என கூறினார். அதே நேரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரடியாக அதிபர் டிரம்ப் விமர்சிக்க மறுத்ததோடு அவரை ஒரு வலுவான தலைவர் என்றும் அவருடன் நான் நல்ல உறவு ஒன்றை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.