டிஆர்பி யில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் .
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியிருந்தது . அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . மேலும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ரிலீசானது .
இந்த இரண்டு படங்களில் எந்த படம் டி ஆர் பியில் முதலிடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள டிஆர்பி தகவலின் படி புலிக்குத்தி பாண்டி முதலிடத்தை பெற்றுள்ளது . நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது சூர்யா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இதற்க்கு கரணம் சூரரைப்போற்று படத்தை ஏற்கனவே பெரும்பாலான ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து விட்டார்கள் . அதிரடி ஆக்ஷன் படமான புலிக்குத்தி பாண்டி படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனதால் இந்த படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .