Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்மூடித்தனமான வெறிச்செயல்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் புது மாப்பிள்ளையை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை ராமசாமி நகரில் மனோ கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை தளி ரோட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒன்னாத் கல்லூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் மனோ கார்த்திக் இரவு பணி முடிந்து தனது நண்பர் மணிபாரதி என்பவருடன் விற்பனை பணத்தை கடை உரிமையாளர் வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார். அதன் பின் அங்கிருந்து இருவரும் புறப்பட்டபோது, திடீரென அவர்கள் முன் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக மனோ கார்த்திக்கின் கழுத்து, தலை, தோள்பட்டை போன்ற அனைத்து இடங்களிலும் வெட்டினர். இதனை அருகில் இருந்து பார்த்த அவரது நண்பர் மணிபாரதி கத்தி கூச்சலிட்டு உள்ளார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் விரைந்து ஓடி வருவதைப் பார்த்த அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனோ கார்த்திகை பொதுமக்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் தளி ரோடு வழியாக மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களின் விவரம் குறித்தும், எந்த காரணத்திற்காக அவர்கள் மனோ கார்த்திகை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |