Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: தீபாவளி பண்டிகைக்கு தயார்…. பலத்த போலீஸ் பாதுகாப்பில் பணிகள் தீவிரம்….!!!!

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவலர்கள் மற்றும் 20 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பனானா லீப் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் போன்றவைகள் தயார் நிலையில் இருக்கிறது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் யானை குளம் மைதானம் மற்றும் சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் போன்றவைகளும், நான்கு சக்கர வாகனங்களை மட்டும் நிறுத்துவதற்கு விபி ரோடு கெயிட்டி திரையரங்கம் உட்புறம் உள்ள கார் நிறுத்துமிடம் மற்றும் சோபிஸ் கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மைதானம் போன்றவைகளும் தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் முன் பின் தெரியாத நபர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் எனவும், சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு பொதுமக்கள் அனைவரும் மோசடி செய்யும் நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மேற்கண்ட பாதுகாப்பு பணிகளுக்காக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனின் உத்தரவுப்படி, வடக்கு காவல் துணை ஆணையர் அன்புவின் மேற்பார்வையில், 4 உதவி ஆணையாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 76 சார்பு ஆய்வாளர்கள், 372 காவல் அலுவலர்கள், 100 ஆயுதப்படை காவலர்கள், 145 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 710 அதிகாரிகள் காவல் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப் பட்டுள்ளனர்.

Categories

Tech |