Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திருச்சி வாலிபருக்கு கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு!

தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது வாலிபருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,093 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் 933 பேருக்கு கொரோனா இல்லை. 27 பேருக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

ஒருவர் குணமடைந்துள்ளார். மேலும் 80 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் மேலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிபார்க்கப்படுகிறது. கொரோனா தனி வார்டுகளில் 13,727 படுக்கைகள் உள்ளன, மொத்தம் 2,464 வெண்டிலேட்டர் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |