திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார்.
இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும் என கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 6 விமான நிலையங்களை தனியாருக்கு விடுவதன் மூலம் ரூ.13,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்,
தனியார் பங்களிப்பை அனுமதிப்பதால் ரூ.13,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும், வாரணாசி, இந்தூர், புவேனேஸ்வர் ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்கள் தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உள்ளூர் விமானப் பயணத்திற்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 7 தடங்களில் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. முதல் தடத்தில் 40 நிமிடம், 2வது தடத்தில் 60 நிமிடம், 3வது தடத்தில் பயண நேரம் 90 நிமிடங்கள், 4வது தடத்தில் 120 நிமிடங்கள், 5வது தடத்தில் பயண நேரம் 120 – 150 நிமிடங்களாக இருக்கும், 6வது தடத்தில் 150- 180 நிமிடங்கள், 180 நிமிடங்களை விட அதிக தூரத்தில் உள்ளவை 7வது தடத்தில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.