குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறி உள்ளது. அனைவருமே ஒருமனதாக ஆதரவளித்து கட்சி வித்தியாசங்களை கடந்து, மாநில வித்தியாசங்களை கடந்து இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் மட்டுமல்ல அது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இந்த விவாதத்திலே பங்கேற்று பழங்குடியின பட்டியலை மாற்றியமைக்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர்.
அனைவரின் ஆதரவோடு ஒருமனதாக இந்த மசோதா நிறைவேறி உள்ளது .அடுத்த கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவை ஒப்புதலை பெற்ற பிறகு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டு, இந்த சட்டம் அமலுக்கு வரும். அதன் பிறகு பழங்குடியின பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு, இந்த சமுதாயத்தினருக்கு பழங்குடியினருக்கான சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். அதன் பழங்குடியினருக்கான அந்தஸ்து கிடைக்கும.
இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதே சமயத்திலே பல்வேறு ஆலோசனைகளையும் மக்களவை உறுப்பினர்கள் வழங்கினார்கள். குறிப்பாக குருவிக்காரன் அல்லது நரிக்குறவன் என்று குறிப்பிடாமல் குருவிக்காரர், நரிக்குறவர் என்று குறிப்பிட வேண்டும் என்றும், இது மரியாதை குறிக்கும் விதமாக இருக்கும். அதே போல ஆணாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், இருபாலரையும் குறிப்பிடுவதாக இருக்கும் என்ற ஆலோசனையும் தெரிவித்தார்கள்.