Categories
தேசிய செய்திகள்

ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்: மத்திய ரயில்வே

நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளது. இதையடுத்து, 15 சிறப்பு ரயில்களின் முன்பதிவு மாலை 6 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களின் தரவுகளை இணையத்தில் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் மாலை 6 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளது.

* ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* மேலும் ரயில் பயணத்தில் போது, பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்படாது என்றும், தங்களது சொந்த போர்வைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

* பயணிகள் ரயில்களின் பயணசீட்டை ரத்து செய்தால் 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

* அதிகபட்சமாக 7 நாட்களுக்கு முன்னதாக பயணிகளின் ரயிலுக்கு முன்பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

* டிக்கெட் உறுதியானால் மட்டுமே பயணிக்க முடியும், RAC, காத்திருப்போர் பட்டியல் முறையில் ரயில் டிக்கெட்டுகளை பெற முடியாது.

Categories

Tech |