பிரிட்டனில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார்.
பிரிட்டனில் நேற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் உலகம் முழுக்க உள்ள LGBT-களது உரிமைகளை முன்னேற்ற திட்டமிடப்பட்டிருந்த முதன்மை மாநாட்டை கைவிடப் போவதாக கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து உயிரியல் ஆண்கள், பெண்கள் விளையாடும் போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்வதை நான் சரி என்று நினைக்கவில்லை.
இது சர்ச்சையான விஷயமாக இருக்கும். இந்த நடைமுறை எனக்கு வித்தியாசமாக தெரிகிறது என்று கூறியிருக்கிறார். மேலும் சிறைகள், மருத்துவமனைகள், ஆடை மாற்றக்கூடிய அறைகள் ஆகியவை பெண்களுக்கென்று தனியாக இருக்கிறது. இவ்வாறு நான் கூறுவதால், பாலினத்தை மாற்றக்கூடியவர்களிடம் நான் அனுதாபம் காண்பிக்கவில்லை என்பது அர்த்தம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.