Categories
மாநில செய்திகள்

“சம்பளத்துடன் கூடிய பயிற்சி”…. கைலாசாவில் வேலைக்கு உடனடி ஆட்கள் தேவை…. தீயாய் பரவும் நித்யானந்தாவின் விளம்பரம்.‌‌….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகப் பணிகளை செய்து வந்தவர் நித்யானந்தா. இவர் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் புதிய தொடங்கியது. இதனால் நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறி தற்போது கைலாசா என்ற ஒரு தனி தீவில் இருக்கிறார்.

இங்கிருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டும் நித்யானந்தா அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வரும் நிலையில் கைலாச தீவு எங்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. சமீபத்தில் நித்யானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் இறந்து விட்டதாகவும் கூட தகவல்கள் பரவியது.

ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் பொய் என கூறி நித்தியானந்தா ஒரு வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் கைலாசா தீவில் வேலைக்கு ஆட்கள் தேவை என நித்யானந்தா இணையதளத்தில் ஒரு நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். அதில் எலக்ட்ரானிக், பிளம்பிங் மற்றும் தூதரக பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைகளுக்கு சம்பளத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |