Categories
உலக செய்திகள்

தடம் புரண்ட இரயில்… குவிக்கப்பட்ட 30 ஆம்புலன்ஸ்… என்னதான் நடந்தது?

ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 30 ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன.

ஸ்காட்லாந்தில் இருக்கும் அபெர்டீன் நகரின் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து காணொளியாக சமூகவலைதளத்தில் பரவி வர அதில் ரயில் தடம் புரண்ட இடத்தில் கரும்புகை எழுவது பதிவாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் ஹெலிகாப்டர் உட்பட 30 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளதும் காணொளியில் பதிவாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் நேற்று இரவு பெருவெள்ளம் ஏற்பட்டதால் ரயில் சேவைகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன. விபத்து நடந்து சிறிது நேரமே ஆனதால் விபத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Categories

Tech |