மும்பையில் 3 வழிதடங்களில் இன்று முதல் 100 ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஐந்தாவது கட்ட நிலையில் ஊரடங்கு நடைபெற்று வரும் சூழ்நிலையில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்படவே, தொடர்ந்து ஆங்காங்கே பொது போக்குவரத்துகள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 80 நாட்களுக்கு பிறகு மும்பையில் மின்சார ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளன. காலை 5:30 மணிக்கு தொடங்கும் மின்சார ரயில்கள், 15 நிமிட இடைவெளிக்கு ஒரு முறை இரவு 11.15 வரை இயக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட மூன்று வழித்தடங்களில் நாளொன்றுக்கு 100 ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.