Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

தலா 16…. கொரோனா வார்டாக மாறிய ரயில் பெட்டிகள்….. விழுப்புரத்தில் அதிரடி நடவடிக்கை…..!!

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் தாக்கம் அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின் பெட்டியை கொரோனா வார்டாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, ரயில்வே நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 10 பெட்டியில் குளியலறை, கழிவறை, டாக்டர், செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளிக்கும் வகையில் வசதியாக மாற்றியது. இதில் ஒரு பெட்டியில் 16 பேர் வீதம் மொத்தம் 160 பேருக்கு தாராளமாக சிகிச்சை அளிக்கலாம் என்றும், இது முற்றிலும் கொரோனாவால் பாதிக்க படவாய்ப்பு இருக்கும் நபர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க நடைமுறைபடுத்த உள்ளதாகவும்,  அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டபின் அவர்கள் சிறப்பு சிகிச்சை மையமான விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |