ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் ஒன்றில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் மாகாணத்தில் ‘ஹம்சா அல் நோரியா மதராசா’ என்ற பெயரில் பழைய வீடு ஒன்றில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல் வகுப்பறைகள் செயல்பட்டு கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு வகுப்பறையின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தில் 13 மாணவர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும், ஒரு மாணவன் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.