வரதட்சனை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் பெண்ணுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த முலாயம்சிங் என்பவருக்கும் விம்லேஷ் குமாரி என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. குமாரியின் பெற்றோர் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுத்தனர். இருப்பினும் திருமணத்திற்கு பிறகு தங்கச் செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என முலாயம் மற்றும் அவரது பெற்றோர்கள் குமாரியை கொடுமைப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குமாரியை அடித்து உதைத்த முலாயமின் குடும்பத்தினர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதனால் வலி பொறுக்க முடியாமல் குமாரி சாலையோரம் ஓடிவந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து குமாரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினரிடம் குமாரியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.