Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் போக்குவரத்து நெரிசலில்…. சிக்கிய ஆம்புலன்ஸ்…. நோயாளி பரிதாப சாவு…!!

சாலையில் ட்ராபிக் ஜாம் காரணமாக ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட  நோயாளி உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும்  அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லை மாநகராட்சி முழுவதுமாக சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளன.

இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மறுபுறம் பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க மாநகர் பகுதியில் பொதுமக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுமார் 5 கிலோ மீட்டருக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசாரும் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட நோயாளியை, டிராபிக் ஜாம் காரணமாக தாமதம் ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |